அத்துமீறிய சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு!

 

அத்துமீறிய சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு!

டிக்டாக் உள்ளிட்ட சீனாவை சேர்ந்த 50 செயலிகளை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துமீறிய சீனா! டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்ஸ்களுக்கு தடை விதித்த மத்திய அரசு!

இந்நிலையில் டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.. இந்த செயலிகள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் தரவுகள் வெளியே செல்வதாக உளவுத்துறை எச்சரித்த தகவலின் பேரில், இந்த செயலிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக கூறியுள்ளது. எனவே இவற்றை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அரசு சார்ந்த பணிகளில் ZOOM செயலியை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.