இந்தியாவுக்குள் மீண்டும் நுழையும் டிக்டாக்!

 

இந்தியாவுக்குள் மீண்டும் நுழையும் டிக்டாக்!

கடந்த ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட டிக்டாக் நிறுவனம் மீண்டும் இந்தியாவுக்குள் நுழையவிருப்பதக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்குள் மீண்டும் நுழையும் டிக்டாக்!

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய – சீன எல்லையான லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த தாக்குதலால் அதிருப்தி அடைந்த மத்திய அரசு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. சீனாவுடன் எந்த தகவலையும் பகிர மாட்டோம் என தடை செய்யப்பட்ட செயலி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதனை ஏற்க மறுத்து ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்தும் அந்த செயலியை நீக்கியது. இதனால் ஏராளமான டிக்டாக் பயனர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் டிக்டாக்கின் டெவலப்பரான பைட் டான்ஸ் நிறுவனம் காப்புரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஜூலை 6 தேதியிட்ட வர்த்தக முத்திரை விண்ணப்பத்தின் விவரங்களை டெக் மாஸ்டர் முகுல் சர்மா, தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் டிக்டாக்கின் பெயர் Ticktock என மாற்றப்பட்டுள்ளது. சிறு மாற்றங்களுடன் அதே செயலி இந்தியாவில் களமிறங்கவிருப்பது இதன்மூலம் உறுதியாகி இருக்கிறது.