“டிக் டாக்” கை சீனாவுக்கு டிக்கெட் எடுக்க டார்ச்சர் செய்கிறார் – ட்ரம்பை எதிர்த்து வழக்கு

“டிக் டாக்” கை சீனாவுக்கு டிக்கெட் எடுக்க டார்ச்சர் செய்கிறார்  –  ட்ரம்பை எதிர்த்து வழக்கு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனமான டிக் டாக் நிறுவனத்தின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறி அதை தடை செய்ய நினைப்பதாக பெய்ஜிங்கை தலைமியிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிக் டாக் நிறுவனம் டிரம்புக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது .

“டிக் டாக்” கை சீனாவுக்கு டிக்கெட் எடுக்க டார்ச்சர் செய்கிறார்  –  ட்ரம்பை எதிர்த்து வழக்கு

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10 கோடி அமெரிக்கர்கள் டிக் டாக்கின் பயனர்களாக இருக்கிறார்கள் என்றும் ,திடீரென அமெரிக்க கருவூலத்திற்கு பணம் கட்ட சொல்லி ட்ரம்பின் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் ,அது மட்டுமல்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்பு டிக் டாக் மூலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் ,அமெரிக்காவை உளவு பார்ப்பதாகவும் டிக் டாக் மீது பல குற்றசாட்டுகளை கூறி, அதை முடக்க ட்ரம்ப் நினைக்கிறார் என்று அந்த நிறுவன அதிகாரிகள் கூறினார்கள் .
டிக் டாக்கால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூரும் ட்ரம்பின் கருத்துக்களை தாங்கள் ஏற்க மறுப்பதாகவும், ஏனெனில் டிக் டாக்குக்கும் சீன அரசுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று அந்த அதிகாரிகள் கூறினார்கள் .
இதற்கான ஆதரங்களை பலமுறை தாங்கள் ட்ரம்ப் நிர்வாகத்திடம் காமித்தும், அமெரிக்க அரசு அரசியல் உள்நோக்கங்கள் பேரில் தங்கள் மீது புகார் கூறுவதாகவும் ,இதன் தரவுகளை சிங்கப்பூரிலும் ,அமெரிக்காவிலும்தான் சேகரிக்கப்படுவதாகவும் என இதை பலமுறை கூறியும், அவர்கள் நிராகரித்து தங்கள் நிறுவனத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதிப்பதால் தாங்கள் வழக்கு தொடர வேண்டியிருந்தது என்று டிக் டாக் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள் .

“டிக் டாக்” கை சீனாவுக்கு டிக்கெட் எடுக்க டார்ச்சர் செய்கிறார்  –  ட்ரம்பை எதிர்த்து வழக்கு