டிக்டாக் செயலிக்கு தடை எதிரொலி: ரூ.45,000 கோடி வரை நஷ்டம்

 

டிக்டாக் செயலிக்கு தடை எதிரொலி: ரூ.45,000 கோடி வரை நஷ்டம்

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களுக்கு இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா – சீனா இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால் டிக்டாக், யூசி பிரவுசர் உட்பட 59 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்டாக் ஆப் நீக்கப்பட்டது.

டிக்டாக் செயலிக்கு தடை எதிரொலி: ரூ.45,000 கோடி வரை நஷ்டம்

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் டிக்டாக் இந்தியாவில் மட்டும் 20 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது. இதனால் டிக்டாக் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’க்கு ரூ 45,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது