டிக்டாக் ஆப்புக்கு தடை!’- என்ன சொல்கிறார் ஜி.பி.முத்து?

 

டிக்டாக் ஆப்புக்கு தடை!’- என்ன சொல்கிறார் ஜி.பி.முத்து?

டிக்டாக் ஆப் தடையால் வேதனையில் இருக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, “நட்புகளை இழந்துவிட்டேன்” என்று கண்கலங்குகிறார்.

டிக்டாக் ஆப்புக்கு தடை!’- என்ன சொல்கிறார் ஜி.பி.முத்து?

நடந்தால் டிக்டாக், உட்கார்ந்தால் டிக்டாக் என்று உலகத்தை மறந்துவிட்டனர் இளைஞர்களும், பெண்களும். போதா குறைக்கு முதியவர்களும் இந்த டிக்டாக்குக்கு அடிமையாகி இருந்தனர். இந்த நிலையில், டிக்டாக் ஆப்புக்கு மத்திய அரசு திடீரென தடை விதித்தது. இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதும், இதனால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீர்கள் கொல்லப்பட்டதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியோடு, இரு நாளுக்கு இடையே போர் பதற்றத்தை அதிகரித்தது. இந்த நிலையில், சீன பொருள்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வெளிப்படையாகவே அறிவித்தது. இதனிடையே, 59 சீன ஆப்புகளுக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு.

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்துவிட்டது மத்திய அரசு. இதனால் டிக்டாக் பிரபலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் ரசிகர்களை தக்க வைக்க அவசரம் அவசரமாக தங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டை தொடங்கி மற்ற செயல்களில் உள்ள கணக்குகளை குறித்து சிலர் விளம்பரப்படுத்த தொடங்கினர்.

டிக்டாக் ஆப்புக்கு தடை!’- என்ன சொல்கிறார் ஜி.பி.முத்து?

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து கூறுகையில், “டிக்டாக் ஆப்பை எடுத்துவிட்டது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த ஆப்பை எடுத்துவிட்டதாக நிறையபேர் வீடியோ போட்டிருக்காங்க. மனவருத்தமாக இருக்கிறது. முக்கியமாக என்னவென்றால் அதில் ப்ரன்ஸ் அதிகமாக இருந்தாங்க. இதனால் அவர்களின் நட்பு போய்விடுகிறது. இந்த டிக்டாக்கை வைத்து எத்தனை பேன்ஸ், எத்தனை மாவட்டம், உலக முழுவதும் நான் பிரபலமானேன். டிக்டாக்கால் தான் யாரு, மற்றவர்கள் யாரு என்று தெரிகிறது. இந்த டிக்டாக் ஆப் இப்போது போகிறது என்றால் ரொம்ப மனசு கஷ்டமாக இருக்கிறது” என்றார் வேதனையுடன்.