“இன்ஸ்டாகிராம், யூடியூபில் எங்களை பின்தொடருங்கள்!” – டிக்டாக் கிரியேட்டர்கள் வேண்டுகோள்

டிக்டாக்கில் உள்ள கிரியேட்டர்கள் தங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பின்பற்றுமாறு தங்கள் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்டாக் ஆப் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டிக்டாக்கில் உள்ள கிரியேட்டர்கள் தங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பின்பற்றுமாறு தங்கள் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களுக்கு இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா – சீனா இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

tiktok

இதையடுத்து இந்தியாவில் டிக்டாக், யூசி பிரவுசர் உட்பட 59 சீன மொபைல் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிக்டாக் ஆப் நீக்கப்பட்டது. இந்நிலையில், டிக்டாக்கில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களை பெற்றிருந்த கிரியேட்டர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளை பின்தொடருமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Most Popular

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது நேற்று...

`அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தணும்!’- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கொந்தளிக்கும் பெற்றோர்கள்

தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் அபராத தொகையுடன் தேர்வுக் கட்டணத்தையும் செலுத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்....
Open

ttn

Close