எங்கள எப்படியாச்சும் ஊருக்கு விட்ருங்க! சோதனைச்சாவடியில் போலீஸ் காலில் விழும் இளைஞர்!

 

எங்கள எப்படியாச்சும் ஊருக்கு விட்ருங்க! சோதனைச்சாவடியில் போலீஸ் காலில் விழும் இளைஞர்!

கொரோனா தொற்று சென்னையில் வேகமாக பரவி வரும் சூழலில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் நாளை முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தபட உள்ளது. இதனால் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களை காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்ட எல்லையான செட்டிபேடு பகுதி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் இ-பாஸ் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றனர்.மேலும் குடும்பமாக வரும் வாகனங்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த மாவட்ட எல்லை வாகன தணிக்கையில் காலை முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனமும்50 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கு தனி பாதை அமைத்து சோதனை செய்யப்பட்டு அனுப்பபட்டுவருகின்றது.

எங்கள எப்படியாச்சும் ஊருக்கு விட்ருங்க! சோதனைச்சாவடியில் போலீஸ் காலில் விழும் இளைஞர்!

இந்நிலையில் இ-பாஸ் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு வருவோர் சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பப்படுவதால் குழந்தைகள், முதியவர்களுடன் சாலைகளில் தவிக்கும் சூழல் நிலவுகிறது. மேலும், சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகாரிகள் காலில் விழும் பரிதாபமும் நடக்கிறது.