குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலி… பொதுமக்கள் பீதி…

 

குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலி… பொதுமக்கள் பீதி…

நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலியால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை ஓட்டியுள்ள வனப்பகுதிகளில் மான், கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீர் தேடி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வாடிக்கை.

குன்னூரில் இரவில் சாலையில் உலா வந்த புலி… பொதுமக்கள் பீதி…

இந்த நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று, குன்னூர் – கோத்தகிரி சாலையில் உள்ள பெல் மவுண்ட் பகுதியில் உலா வந்தது. இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு, அச்சத்துடன் புலி கடந்து செல்லும் வரை காத்திருந்தனர்.

இந்த நிலையில், சாலையில் சிறிதுநேரம் உலாவிய அந்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் நிம்மதி அடைந்த, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே சாலையில் புலி உலாவிய சம்பவம் குன்னூர் பகுதி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.