டிக்டாக், வீ சாட்… 45 நாள்களில் தடை – அமெரிக்கா அதிரடி முடிவு

 

டிக்டாக், வீ சாட்… 45 நாள்களில் தடை – அமெரிக்கா அதிரடி முடிவு

2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் டிக்டாக் ஆப் (TikTok) வெளியானது. சரியாகப் பார்த்தல் இன்னும் நான்கு ஆண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்கான வரவேற்பை உலகம் முழுக்க மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அளித்தனர்.

சீனா உருவாக்கிய டிக்டாக் ஆப் மூலம் பலரும் தங்களை நடிகர்களாகவே நினைத்துக்கொண்டனர். பாடல்களுக்கு நடனம் ஆடுவதும், தனக்குப் பிடித்த நடிகரின் வசனத்தைப் பேசி நடிப்பது… என மினி ஸ்டாராகவே டிக்டாக் அவர்களை மாற்றியது.

டிக்டாக், வீ சாட்… 45 நாள்களில் தடை – அமெரிக்கா அதிரடி முடிவு

மினி ஸ்டார் மட்டுமல்ல, தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள் வந்து இவர்களைப் பேட்டி எடுக்கும் அளவுக்கு புகழ் பரவியது.

டிக்டாக் புகழில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஏராளமானவர்களுக்குக் கிடைத்தது. பலருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ் இருந்ததார்கள்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்தது எனக் கூறப்பட்டாலும் அந்த ஆப் பாதுகாப்பானது அல்ல என்று சொல்லப்பட்டது. காரணம், அதைப் பயன்படுத்துபவர்களின் விவரங்களைத் திருடுவதாகவும் அதன்மீது புகார் கூறப்பட்டது.

டிக்டாக், வீ சாட்… 45 நாள்களில் தடை – அமெரிக்கா அதிரடி முடிவு

பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆப்களில் ஒன்று டிக்டாக். தற்போது அது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட விருக்கிறது.

டிக்டாக் மற்று வீ சாட் ஆப்கள் பயனாளர்களின் விவரங்களைத் திருடி சீனாவின் உள்ள நிறுவனத்திற்கு அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் ஆபத்து விளையலாம் என்று அது கருதுகிறது.

இன்னும் பல்வேறு காரணங்களைக் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் 45 நாள்கள் கழித்து வீசாட் மற்றும் டிக்டாக் இரண்டும் அமெரிக்காவில் தடை செய்யப்பட விருப்பதாகக் கூறியுள்ளார்.

டிக்டாக், வீ சாட்… 45 நாள்களில் தடை – அமெரிக்கா அதிரடி முடிவு

அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக்கின் அமெரிக்கச் செயற்பாடுகளை விலைக்கு வாங்க விருக்கிறது எனும் செய்தி வெளிவந்தது சில நாள்களுக்கு முன்பு.

அதனால், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட மாட்டாது எனக் கருதினர். ஆனால், அமெரிக்கா அதிரடியாக இந்தத் தடை அறிவிப்பை அறிவித்துள்ளது.