இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்….

 

இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்….

இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜூன் 1ம் தேதி முதல் கூடுதலாக 200 ரயில்கள் இயக்கப்படுகிறது.

4ம் கட்ட லாக்டவுன் இம்மாதம் 31ம் தேதி நிறைவடை உள்ளது. இதற்கிடையே வரும் திங்கட்கிழமை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை தொடங்க மத்திய அரசு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டது. இதுதவிர, வரும் 1ம் தேதி முதல் 101 ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே அறிவித்தது. மேலும் இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஆன்லைனில் நேற்று தொடங்கியது.

இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்….

ரயில்களில் 5.51 லட்சம் பயணிகளுக்காக ஆன்லைனில் முன்பதிவு தொடங்கிய 6 மணி நேரத்துக்குள் 2.37 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நாளை (இன்று) முதல் நாடு முழுவதுமாக ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

இன்று முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்….

இதனையடுத்து இன்று முதல் ரயில் நிலையங்களின் முன்பதிவு கவுண்டர்களில் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர அஞ்சல் நிலையங்களிலும் மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு அல்லது கேன்சல் செய்யலாம் என தகவல். மீண்டும் விமானம் மற்றும் ரயில் சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது லாக்டவுனுக்கு முந்தைய இயல்புநிலைக்கு திரும்புவதற்கான சமிக்ஞையாக தெரிகிறது.