பாகிஸ்தானில் டிக்டாக் தடை நீக்கம் – காரணம் இதுதான்

 

பாகிஸ்தானில் டிக்டாக் தடை நீக்கம் – காரணம் இதுதான்

உலகளவில் ஒரு ஆப் இத்தனை வேகத்தில் பரவும் என்றும், அத்தனை கோடி பேர் டவுண்ட்லோடு செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு குறுகிய காலத்தில் புகழ்பெற்றது டிக்டாக் ஆப்.

டிக்டாக் மூலம் வீடியோக்கள் போட்டு செலிபிரிட்டானவர்கள் ஏராளம். அதன் வழியே சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்களும் பலர். நாள் முழுவதும் டிக்டாக் வீடியோக்களில் மூழ்கியிருந்தோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் வரும்.

பாகிஸ்தானில் டிக்டாக் தடை நீக்கம் – காரணம் இதுதான்

சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்னையால் சீன நாட்டின் 100க்கும் மேற்பட்ட் ஆப்கள் தடைசெய்யப்பட்டன. அவற்றில் ஒன்று டிக்டாக். இதனால், டிக்டாக் பயனாளர்கள் அரசுக்கு கோரிக்கை எல்லாம் வைத்தார்கள்.

டிக்டாக் பயனாளர்களின் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வில்லை என்று டிக்டாக் ஆப்பை அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானில் டிக்டாக் தடை நீக்கம் – காரணம் இதுதான்

பாகிஸ்தானில் டிக்டாக் ஆப் தடைசெய்யப்பட்டதற்கான காரணம், அதன்மூலம் ஆபாச வீடியோக்கள் பரவுகின்றன. அதனால், இளைஞர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்திருந்தது பாகிஸ்தான் தரப்பு. தற்போது ஆபாசமான வீடியோக்களை நீக்கி விடுவதாக டிக்டாக் நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில் பாகிஸ்தானில் டிக்டாக் ஆப்க்கான தடை நீக்கப்பட்டுள்ளது.