அமெரிக்காவில் அடாவடியாக கைமாறிய ’டிக் டாக்’ – சீனா குற்றச்சாட்டு

 

அமெரிக்காவில் அடாவடியாக கைமாறிய ’டிக் டாக்’ – சீனா குற்றச்சாட்டு

ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் ’டிக் டாக்’ நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. வர்த்தக விதிமீறல்களை மீறி அடாவடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.

அமெரிக்காவில் ’டிக் டாக்’ நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து, ’டிக் டாக்’ செயலியின் அமெரிக்க செயல்பாடுகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக வால்மார்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்துடன் ’டிக் டாக்’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அமெரிக்காவில் அடாவடியாக கைமாறிய ’டிக் டாக்’ – சீனா குற்றச்சாட்டு

இதன்படி ’டிக் டாக்’ அமெரிக்க செயல்பாடுகளின் 80 சதவீத உரிமை அமெரிக்க நிறுவனங்களுக்கு செல்ல உள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ’டிக் டாக்’ நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், வர்த்தக ஒப்பந்தம் அடாவடிதனமாக நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு குறைவாக ஒப்பந்தம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் அடாவடியாக கைமாறிய ’டிக் டாக்’ – சீனா குற்றச்சாட்டு

’டிக் டாக்’ மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா மற்றும் சீனா என இருநாடுகளுமே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சீன தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ’டிக் டாக்’ நிறுவனம் தற்போது வரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.