`இரவு முழுவதும் சித்ரவதை; உட்கார முடியவில்லை!’- துறையூர் போலீஸால் வாலிபருக்கு நடந்த கொடுமை

 

`இரவு முழுவதும் சித்ரவதை; உட்கார முடியவில்லை!’- துறையூர் போலீஸால் வாலிபருக்கு நடந்த கொடுமை

வியாபாரிகளை மிரட்டயதாக வந்த புகாரைத் தொடர்ந்து வாலிபரை இரவில் அழைத்துச் சென்ற காவல்துறையினர், சித்ரவதை செய்ததோடு, அவரால் உட்கார முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கொல்லம் பட்டியை சேர்ந்த ரகுநாத் என்பவர் கேரளாவில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய ரகுநாத்தை, கடந் 5ம் தேதி இரவு 2 மணிக்கு துறையூர் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். வியாபாரிகளை மிரட்டியதாக கூறி காவல் நிலையத்தில் வைத்து அவரை காவல்துறையினர் கடுமையாக அடித்துள்ளனர். அடி தாங்க முடியாமல் ரகுநாத், அங்கிருந்த ஆல் அவுட் பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டார். உடனே உப்பு சோப்பு கலந்த கரைசலை ரகுநாத்துக்கு கொடுத்து வாந்தி எடுக்க வைத்துள்ளனர் காவல்துறையினர். ஆனால், ரகுநாத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

`இரவு முழுவதும் சித்ரவதை; உட்கார முடியவில்லை!’- துறையூர் போலீஸால் வாலிபருக்கு நடந்த கொடுமை

இதனால், தனியார் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் வெளியே தெரிந்து விடும் என்பதால் இந்த தந்திர நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவசர அவசரமாக டாக்டர்களிடம் அறிக்கை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், இரவில் மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது, காவல்துறையினர் அடித்தார்களா என்று நீதிபதி கேட்டால் அடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் குண்டாஸில் போட்டுவிடுவோம் என்று காவல்துறையினர் மிரட்டியுள்ளனர். பின்னர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட ரகுநாத்திடம், காவல்துறையினர் அடித்தார்களா என்று கேட்டுள்ளார். காவல்துறையினர் அடிக்கவில்லை என்று பொய் சொல்லியுள்ளார் ரகுநாத். பின்னர் ரகுநாத்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார் ரகுநாத். சிறையிலிருந்த கடந்த 27ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ள ரகுநாத், காவல்துறையினர் அடித்ததால் உக்கார முடியாமல் தவித்து வருகிறார்.

`இரவு முழுவதும் சித்ரவதை; உட்கார முடியவில்லை!’- துறையூர் போலீஸால் வாலிபருக்கு நடந்த கொடுமை

இந்த நிலையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அனுப்பியுள்ளார் ரகுநாத். “ரகுநாத் சாதி சங்கத்தில் இருந்துக்கொண்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து வியாபாரிகளை மிரட்டியதாக புகார் வந்தது. அதனால் வழக்குப்பதிவு செய்து விசாரித்தோம். மற்றபடி ரகுநாத் சொல்வது பொய்” என்கின்றனர் துறையூர் காவல்துறையினர்.
“ரகுநாத் தாக்கப்பட்டது குறித்து முழுமையாக விசாரித்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கிறேன்” என்கிறார் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா. பொறுத்திருந்து பார்ப்போம்.