துறையூர்: பெருமாள்மலை கோவிலை சீர்செய்யக்கோரி பக்தர்கள் கோரிக்கை

துறையூர்: பெருமாள்மலை கோவிலை சீர்செய்யக்கோரி பக்தர்கள் கோரிக்கை

துறையூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள்மலை கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கோவிலுக்கு செல்லும் சாலையை சீர் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறையூர்: பெருமாள்மலை கோவிலை சீர்செய்யக்கோரி பக்தர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து பெரம்பலூர் செல்லும் சாலையில் பெருமாள் மலை உள்ளது. இந்த மலையில் உள்ள பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

துறையூர்: பெருமாள்மலை கோவிலை சீர்செய்யக்கோரி பக்தர்கள் கோரிக்கை

பெருமாள் மலையில்தான் கிழக்குப் பார்த்த திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி சேவை சாதிக்கிறார்.
பூமி மட்டத்தில் இருந்து 960 அடி உயரத்தில் இத்தலம் மலைமேல் அமைந்துள்ளது. படிக்கட்டுகளின் வழியாக சென்றால் 1532 படிக்கட்டுகளையும் ஏழு சிறிய குன்றுகளையும் தாண்டிச் சென்று இத்தலத்தை அடையலாம்.

துறையூர்: பெருமாள்மலை கோவிலை சீர்செய்யக்கோரி பக்தர்கள் கோரிக்கை

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமையும் பிரசன்ன வெங்கடஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களை வணங்குவதற்கு பல்லாயிரக்கானக்கான பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து குடும்ப சகிதமாக நடந்தும் வாகனங்களில் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்வார்கள்.
இரு சக்கர நான்கு சக்கர வாகனத்தில் பெருமாளைத் தரிசிக்க செல்பவர்கள் சாலை வழியாகச் செல்வார்கள். அந்த சாலை தற்போது பழுதடைந்து ஒரு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.