’’துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்’’ – ஸ்டாலின் புகழ்ச்சியால் துரைமுருகன் கண்ணீர்

 

’’துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்’’ – ஸ்டாலின் புகழ்ச்சியால் துரைமுருகன் கண்ணீர்

துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பேசியதைக்கேட்டு நெகிச்சியில் கண்ணீர் விட்டார் துரைமுருகன்.

’’துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்’’ – ஸ்டாலின் புகழ்ச்சியால் துரைமுருகன் கண்ணீர்

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்ட 70 பேர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதிலும் உள்ள மற்ற பொதுக்குழு உறுப்பினர்கள் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றனர்.

’’துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்’’ – ஸ்டாலின் புகழ்ச்சியால் துரைமுருகன் கண்ணீர்

இப்பொதுக்குழுவில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின், ’’அண்ணா, நாவலர், பேராசிரியர் வகித்த பெருமைமிகு பொறுப்பை பெற்றிருக்கிறார் துரைமுருகன். திமுகவின் நான்காவது பொதுச்செயலாளாக அவர் பொறுப்பேற்றிருக்கிறார். 9 முறை சட்டமன்றத்திற்கு சென்றிருக்கும் துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் அவர் ஒரு ஸ்டாராக மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். துரைமுருகன் இருக்கு இடமே கலகலப்பாக இருக்கும்’’ என்று ஸ்டாலின் புகழ்ந்து கொண்டே போக, ஒரு கட்டத்தில் நெகிழ்ச்சியி துரைமுருகன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

’’துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார்’’ – ஸ்டாலின் புகழ்ச்சியால் துரைமுருகன் கண்ணீர்

பதிலுக்கு துரைமுருகனும், ’’நான் கடைசிவரைக்கும் திமுகவில்தான் இருப்பேன். எனக்கு பின்னரும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் திமுகவுக்கு விசுவாசமாக இருப்பார்கள்’’ என்று உருகினார்.

-கதிரவன்