நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை – திமுக, அதிமுவினர் மோதலால் பதற்றம்

 

நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை – திமுக, அதிமுவினர் மோதலால்  பதற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா பேகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை – திமுக, அதிமுவினர் மோதலால்  பதற்றம்

அப்போது கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த திட்ட பணிகளுக்கு இப்போது அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் வைப்பதற்காக திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், ஒன்றியக்குழு தலைவரும், துணைத் தலைவரும் தீர்மானம் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

அப்போது ஆத்திரமடைந்த கவுன்சிலர் ஒருவர் நாற்காலியை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. இதனால் கூட்டம் முடிந்து விட்டதாக சொல்லி நிலக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான யாகப்பன் கூட்டத்தை விட்டு வெளியேறினார் .

அப்போது அவரை முற்றுகையிட்டு திமுகவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினரின் எதேச்சையான போக்கை கண்டித்தும் கூட்ட அரங்கில் நுழைந்து தகராறில் ஈடுபட முயன்ற அதிமுகவினர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்று திமுக ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் அளித்து இருக்கின்றனர்.