பிறந்த நாள் கொண்டாடினார்கள் -சிறைக்கு சென்றார்கள் -ஒரு காளையால் ஒரு ஊருக்கே ஏற்பட்ட கதி .

பிறந்த நாள் கொண்டாடினார்கள் -சிறைக்கு சென்றார்கள் -ஒரு காளையால் ஒரு ஊருக்கே ஏற்பட்ட கதி .

ஒருவர் தான் வளர்த்த காளைக்கு பிறந்த நாள் கொண்டாடியதால் அதில் கலந்து கொண்ட அனைவரும் சிறை சென்றார்கள்.

பிறந்த நாள் கொண்டாடினார்கள் -சிறைக்கு சென்றார்கள் -ஒரு காளையால் ஒரு ஊருக்கே ஏற்பட்ட கதி .

மும்பையின் விஷ்ணு நகரின் ரெதி பண்டரில் உள்ள மோத்தா காவ்னில் கிரண் மத்ரே என்பவர் ஷாஹென்ஷா என்ற காளைமாட்டை வளர்த்து வந்தார் .அந்த காளை மீது அவருக்கு கொள்ளை பிரியமிருந்தது .அதனால் அவர் அந்த காளையை தன்னுடைய பிள்ளையை வளர்ப்பது போல செல்லமாக வளர்த்து வந்தார் .இந்நிலையில் அந்த காளைக்கு மார்ச் 11 அன்று பிறந்த நாள் விழா கொண்டாட அவர் முடிவு செய்தார் .
அதனால் அவர் அந்த காளை மாட்டின் பிறந்த நாள் விழாவை மோத்தா காவ்னில் கொண்டாட முடிவெடுத்து .அதற்காக போஸ்ட்டர், பேனர் எல்லாம் கட்டி ,இசை ,நடனத்தோடு சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தார் .அந்த பர்த்டேவுக்கு அந்த ஊர் மக்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்திருந்தார் .அதனால் அந்த ஊர் மக்கள் அனைவரும் மார்ச் 11,ம் தேதி நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர் .அப்போது அந்த காளைக்கு ஒரு ராட்சத சைஸ் கேக் வெட்ட ஏற்பாடு செய்யபட்டிருந்தது .

இந்த விழா சமூக ஊடகத்தில் வைரலானது .அதை அந்த ஊர் போலீசும் பார்த்தார்கள் .அதனால் அந்த பிறந்த நாள் விழாவை நடத்திய இடத்திற்கு போலீசார் கூட்டமாக சென்றார்கள் .அப்போது அந்த விழாவில் எவரும் கொரானா விதிப்படி முக கவசம் அணியாமலும் ,சமூக இடைவெளி இல்லாமலும் இருப்பதை கண்டனர் .மேலும் அந்த காளையை கொடுமை படுத்துவதை கண்டனர் .அதனால் அந்த காளையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அந்த ஊர் மக்கள் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர் .

பிறந்த நாள் கொண்டாடினார்கள் -சிறைக்கு சென்றார்கள் -ஒரு காளையால் ஒரு ஊருக்கே ஏற்பட்ட கதி .