ஒன்றிணைவோம் வா மூலம் வசூல் வேட்டையாடிய தி.மு.க! – முன்னாள் தி.மு.க எம்.பி குற்றச்சாட்டு

 

ஒன்றிணைவோம் வா மூலம் வசூல் வேட்டையாடிய தி.மு.க! – முன்னாள் தி.மு.க எம்.பி குற்றச்சாட்டு

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக சமீபத்தில் தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
தி.மு.க விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். அழகிரி ஆதரவாளராக இருந்த இவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கொரோனா பாதிப்பு நிவாரண திட்டங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அவரை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் கே.பி.ராமலிங்கம். இதனால் சில வாரங்களுக்கு முன்பு இவர் வகித்து வந்த பதவி பறிக்கப்பட்டது, பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கே.பி.ராமலிங்கம் இன்று திடீரென்று சந்தித்துப் பேசினார்.

ஒன்றிணைவோம் வா மூலம் வசூல் வேட்டையாடிய தி.மு.க! – முன்னாள் தி.மு.க எம்.பி குற்றச்சாட்டுபின்னர் அவரிடம் நிருபர்கள் திடீர் சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்காக நன்றி தெரிவிக்க வந்தேன். குடிமராமத்துப் பணிகளை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்துள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தேன். தி.மு.க-வின் ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் தி.மு.க மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக கட்சிப் பணம் செலவழிக்கப்படவில்லை. போத்தீஸ், சென்னை சில்க்ஸ் போன்ற வியாபாரிகளிடம் மிரட்டி பணம் வசூலித்துள்ளார்கள். கருணாநிதியைப் போல கட்சி நடத்த மு.க.ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. மூத்த தலைவர்கள் யாருக்கும் கட்சியில் மரியாதை இல்லை” என்றார்.