இன்று மாலைக்குள் பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது…

 

இன்று மாலைக்குள் பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது…

பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலைக்குள் இந்தியா வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2016ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதுவரை டசால்ட் நிறுவனம் இந்தியாவுக்கு 10 ரபேர் போர் விமானங்களை வழங்கியுள்ளது. இதில் 5 விமானங்கள் இந்திய விமான படை வீரர்களின் பயிற்சிக்காக பிரான்சில் உள்ளன. எஞ்சிய 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தது. அவை முறைப்படி கடந்த செப்டம்பர் 10ம் தேதியன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.

இன்று மாலைக்குள் பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது…
ரபேல் போர் விமானம்

அந்த 5 ரபேல் போர் விமானங்களும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் லடாக்கின் பிரச்சினைக்குரிய பகுதியில் குறுகிய காலத்தில் விமான படையுடன் அந்த விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் நிறுவனம் மேலும் 3 ரபேல் போர் விமானங்களை நவம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று மாலைக்குள் அவை இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை பிரான்சிலிருந்து கிளம்பும் 3 ரபேல் போர் விமானங்களும் மாலைக்குள் இந்தியா வந்தடையும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று மாலைக்குள் பிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருது…
ரபேல் போர் விமானங்கள்

2021 ஜனவரியில் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 3 மற்றும் 7 ரபேல் போர்விமானங்களை இந்தியாவுக்கு டசால்ட் நிறுவனம் வழங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
2022 மார்ச் மாதத்துக்குள் ஒப்பந்தப்படி அனைத்து விமானங்களையும் டசால்ட் நிறுவனம் இந்தியாவிடம் வழங்கி விடும் என தெரிகிறது.