தேவைப்படுவோருக்கு மூன்று வேளையும் உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

 

தேவைப்படுவோருக்கு மூன்று வேளையும் உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முழு ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கால் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் பல மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உணவு வழங்கி வரும் நிலையில், அரசு சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படுவோருக்கு மூன்று வேளையும் உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் தேவைப்படுவோருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் மக்கள் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காக சிறப்பு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. 94987 47644, 94987 47699 இந்த செல்போன் எண்களில் அழைத்தால் உணவு வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், உணவு தேவைப்படும் நபர்கள் முன்கூட்டியே இந்த நம்பரில் தகவல் தெரிவித்தால் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் என்றும் நாளை முதல் தொடங்கப்படும் இந்த திட்டம் ஊரடங்கு முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.