• February
    22
    Saturday

Main Area

Mainமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்… அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்..!

புரட்சி தலைவர்
புரட்சி தலைவர்

அவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்தவர் என்பதால் அவரை எம்.ஜி.ஆருக்கு ரொம்ப பிடிக்கும். முன் அனுமதி இல்லாமல் ராமாபுரம் தோட்டத்திற்கு  எப்போது வேண்டுமானாலும் போய் எம்.ஜி.ஆரை சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர். 

mgr

அவருக்கு மூன்று பெண்கள். முதல் இருவர் திருமணத்திற்கும் அவர் எம்.ஜி.ஆரை அழைக்கூட இல்லை.மூன்றாவது மகள் திருமணத்தின் போது அவர் தேர்தலில் தோற்று இருந்தார். ஊரிலேயே பெரியவீடு அவருடையதுதான்.முன்னோர்கள் கட்டிய பழைமையான வீடு, அங்கங்கே விரிசல்கள் இருக்கும் யாராவது அதைப்பாத்து விசாரித்தால் ' ஏம்ப்பா,நாலுவாட்டி எலக்சன்ல நின்னு மூனுவாட்டி ஜெயிச்சிருக்கேன்,ரெண்டு பொட்ட புள்ளைகள கட்டிக்குடுத்திருக்கேன்…  ஊடு உட்டுபோகாதா ' என்பார்.அதற்கு அந்த வட்டார வழக்கில் வீடு விரிசல் விட்டால்,தகர்ந்து விடாதா என்று அர்த்தம்.

மூன்றாவது பெண் திருமணம் நிச்சையமானதும், வீட்டு பெண்கள் ஒரே குரலில் ' இது நம்மவூட்டு கடைசி திருமணம்,அதனால தலைவரக் கூப்பிடுங்க' என்று அடம்பிடிக்க,' ஒரு பெரியமனுசன தேவையில்லாத தொந்தரவு பன்ணறதான்னு ரெண்டு மனசா இருக்கு' என்று சொல்லிக்கொண்டே,துணைக்கு ஒரு பொடியனுடன் சென்னைக்கு புறப்பட்டார்.

ramavaram

இரவு பொறுமையாக சாப்பாட்டுக்குப் பிறகு கிளம்பி பழைய அம்பாசிடரில் சாவகாசமாக அவர்கள் செங்கல்பட்டு வரும்போதே விடிந்து விட்டது. சென்னைக்குள் வராமலே கூட வந்த பொடியனிடம் எம்ஜிஆரின் பெருமைகளை சொல்லிக்கொண்டு பல்லாவரம் கண்டோன் மெண்ட் வந்ததும் ' இங்க லெஃப்ட் எடறா' என்று டிரைவருக்கு வழிகாட்டி ராமாவரம் தோட்டத்துக்குள் வரும்போது மணி 7.30 இருக்கலாம்.

கார் டிக்கியைத் திறந்து அதில் இருந்த ஒரு பெரிய பலகாரக்கூடையை டிரைவரும் பொடியனும் தொடர,பல வணக்கங்களை ஏற்றபடி உள்ளே கையில் சின்ன சூட்கேசுடன் நுழைந்தவர் நிமிர்ந்து மாடிப்படியைப் பார்க்கும்போதே உள்ளே இருந்து தலைவரின் குரல் வந்தது , ' உக்காருங்க வந்துட்டேன்'!

mgr

சிறிது நேரத்தில் எம்ஜிஆர் அந்த ஹால் போன்ற அறைக்குள் வந்தார்.பொடியனும் டிரைவரும் அந்த பலகாரக்கூடையை மறுபடியும் தூக்கப் போனார்கள். இருக்கட்டும் என்று கைகாட்டினார் எம்ஜிஆர். டிரைவர் வெளியே போய்விட பொடியன் சுவற்றுடன் ஒட்டிக்கொண்டு நிற்க அவரிடம் பத்திரிகையை நீட்டினார், எம்ஜிஆர் இரண்டு கைகளாலும் பத்திரிகையைப் வாங்கி சிரித்தபடி திருமண பத்திரிகையை வாங்கிப் பார்த்தார்.அதில் கட்சியின் கறுப்பு, சிகப்பு,வெள்ளையும் இல்லை... எம்ஜிஆரின் பெயரும் இல்லை!.

அவர் சிரித்தபடியே ' உங்களுக்கு எத்தன பசங்க' என்றார். இவர்,தானும் சிரித்தபடியே,ரெண்டு பசங்க,மூனு பொண்ணுங்க தலைவரே'என்றார்.
'பொன்னுக்கு எத்தன பவுன் போடறீங்க ' என்றார் எம்ஜிஆர். நம்மவர் சிரிப்புக் குறையாமல் இருபது பவுன் போடுவதாக சொன்னார்.எம்ஜிஆருக்கு ஆச்சரியம்,' அவ்வளவுதானா…! ஏன்? ' என்றார், இவரோ சிரித்தபடியே என்ன செய்ய தலைவரே பெரியவள அந்நியத்துல குடுத்ததால கெளரவம்னு 50 பவுன் போட்டேன், அடுத்த மக கல்யாணத்து சமையத்துல ஈஸ்ட் பெங்கால் வார் வந்து தங்க விலை ஏறிப்போச்சு , அவளுக்கு முப்பது பவுன்தான் போட முடிஞ்சுது. அப்புறம் ரெண்டு மூனு எலக்சன் வரவும் சின்னவ படிப்பும் முடிஞ்சுட்டுது. இவளுக்கு 20 பவுன் போடறோம். அமெவுண்ட் ஒன்னுதாங்க தலைவரே, பவுன் வெலைதான் ஏறிக்கிட்டே போகுதே' என்றதும், எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே, 'சரி சாப்பிட்டுட்டு கிளம்புங்க' என்று அவரைத் தோளில் கைபோட்டு அறைவாசல் வரை அழைத்துவந்தார்.

mgr

பொடியனும் அவரும் அவசரமாக சாப்பிட்டு விட்டு வெளியே வர, டிரைவர் ஏற்கனவே காரைத்  திருப்பி நிறுத்தியிருந்தார்.இருவரும் ஏறிக்கொண்டதும் கார் ராமாபுரம் தோட்டத்திலிருந்துகிளம்பியது..கார் மீண்டும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் சாலையில் திரும்பும்போது அவர் பொடியனிடன்,' சூட்கேஸ் எங்க மாப்ள ' என்று கேட்க ' கீழ இருக்குமாமா' என்று பொடியனும்,' டிக்கில வச்சிருகங்கையா' என்று டிரைவரும் ஒரே சமையத்தில் சொன்னார்கள். 

அவர் வண்டிய நிறுத்தச்சொல்லி விட்டு பொடியன் தன் காலடியில் வைத்திருக்கும் சூட்கேசை பார்த்துவிட்டு டிரைவரிடம் ' ஏமுட்டு பொட்டி இங்க இருக்கு, நீ எதைடா டிக்கில வச்ச'  என்றார். டிரைவர் குழப்பத்துடன் இறங்கிப்போய் கார்டிக்கியைத் திறந்து இதே சைஸ் சூட்கேஸ் ஒன்றை எடுத்து வந்து நீட்டினார்.பெரியவர் அதை வாங்கி மடியில் வைத்து திறந்தார்,பெட்டி நிறையப் பணம்.எல்லாம் நுறு ரூபாய் நோட்டுகள்.தந்திப்பேப்பரில் சுற்றி பண்டல் போடப்பட்டு வரிசையாக அடுக்கி இருந்தது.' காரத்திருப்படா கம்னாட்டி' என்றார்.

ra

கார் ஒரு யூ டர்ன் அடித்து மீண்டும் ராமாவரம் தோட்டத்தை நோக்கிப் பறந்தது. இவர்களின் கார் தோட்டத்தின் வாயிலை நெருங்கும்போது உள்ளே இருந்து போலீஸ் ஜீப் வெளியில் வந்தது. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆரின் கார் வெளியே வருவதைப்பார்த்ததும் காரை நிறுத்தச்சொல்லி அவர் இறங்கி கையில் பணபெட்டியை தூக்கிக்கொண்டு ஓடினார்.

mgr

இவர் பதட்டத்துடன் இவர் ஓடி வருவதைப் பார்த்ததும் எம்ஜிஆரின் கார் சடன் பிரேக் அடித்து நின்றது.எம்ஜிஆர் இறங்கி நின்று ' இன்னும் கிளம்பலயா? என்று சிரித்தார்.இவரோ பதறியபடி,'தலைவரே இந்தப் பெட்டி ' என்று இவர் ஆரம்பிக்க , எம்ஜிஆர் காரைச் சுற்றிக்கொண்டு அருகில் வந்து தோளில் கை போட்டுக்கொண்டு சொன்னார்' மொத பொண்ணுக்கு என்ன போட்டீங்களோ அதே 50 பவுன மத்த பொண்ணுகளுக்கும் போடுங்க,அதுக்குதான் இந்தப் பணம்' என்று அவர் தோளில் தட்டிவிட்டு எதுவுமே சொல்லாமல் போய்விட்டார்.அப்புறம் பொடியன்தான் ஓடிப்போய் இன்ப அதிர்ச்சியில் நிலைகுலைந்து நின்றிருந்த அவர் கையை பிடித்து காருக்கு அழைத்துவர வேண்டு இருந்தது! அதனால்தான் அவர் இன்று வரை ‘புரட்சி தலைவர்’ராகவும் ‘ பொன்மன செம்மல்’ ஆகவும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.