அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

நிவர், புரேவி புயலைத் தொடர்ந்து தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

தமிழகத்தில் மாதம் மும்மாரி மழைப் பெய்த காலம் தற்போது மாறி, வாரத்திற்கு மூன்று புயல் அடிக்கும் நிலை வந்து விட்டது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான நிவர் புயல் 25ம் தேதி புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இது கஜா புயல் அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் விளை நிலங்களை சேதமடையச் செய்ததோடு, கால்நடைகள் மற்றும் மனிதர்களை உயிரிழக்கவும் செய்தது.

அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்ற நிவர் புயலின் தாக்கம் குறைவதற்குள், தென் வங்கக்கடலில் புரேவி புயல் உருவானது. அந்த புயல் நேற்று இரவு இலங்கையில் கரையைக் கடந்த நிலையில், பாம்பனுக்கு மிக அருகில் மையம் கொண்டிருக்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே புரேவி புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், தென் மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

இந்த புரேவி புயல் இன்னும் கரையைக் கடக்காத சூழலில், தற்போது மீண்டும் தெற்கு அந்தமான் கடலில் நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறுமா? இதன் வீரியம் என்ன? என்பது குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து புயல் உருவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்கிறது. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தும் கூட, இயல்பான மழையே பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிர்ச்சி தகவல்..! புரவி புயல் இன்னும் கரையைக் கடக்கல ; அதற்குள் இன்னொரு புயலா .!?

கடந்த சில ஆண்டுகளாக தானே, ஒகி, கஜா, வர்தா, நிவர் என அடுத்தடுத்து புயல் தாக்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளித்த நபர் ஒருவர், ‘காலநிலை மாற்றமே இதற்கு காரணம். மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை பெருங்கடல்கள் வாங்கிக் கொள்வதால், அதன் வெப்ப நிலை உயர்ந்து புயல் உருவாகிறது. இந்த காலநிலை மாற்றம் மனிதர்களுக்கு சவாலான சூழலை உருவாக்கும். வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலில் வெப்பம் அதிகரித்திருப்பதால் அடிக்கடி புயல் உருவாகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.