“பில்கேட்ஸுக்கே பயம் காட்டி…ஒபாமாவையே ஓரம் கட்டி… “-கம்ப்யூட்டர் கம்பெனிக்காரங்க கணக்கையே ‘ஹேக்’ செய்த டீனேஜ் கில்லாடிகள்..

 

“பில்கேட்ஸுக்கே பயம் காட்டி…ஒபாமாவையே ஓரம் கட்டி… “-கம்ப்யூட்டர் கம்பெனிக்காரங்க கணக்கையே ‘ஹேக்’ செய்த டீனேஜ்  கில்லாடிகள்..

நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்கள் உலகில் பெருகிக்கொண்டே போகின்றன .இப்போது அமெரிக்காவில் பில்கேட்ஸ் ,ஒபாமா போன்ற பல விஐபிக்களின் ட்விட்டர் கணக்குகளையே ஹேக் செய்த டீனேஜ் இளைஞர்களை FBI கண்டுபிடித்துள்ளது .

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கோடீஸ்வரர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ததாக இரண்டு டீனேஜ் இளைஞர்கள் மற்றும் ஒரு 22 வயது இளைஞரை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் FBI நீதித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

“பில்கேட்ஸுக்கே பயம் காட்டி…ஒபாமாவையே ஓரம் கட்டி… “-கம்ப்யூட்டர் கம்பெனிக்காரங்க கணக்கையே ‘ஹேக்’ செய்த டீனேஜ்  கில்லாடிகள்..

மேசன் ஷெப்பர்ட் என்ற 19 வயதான பிரிட்டிஷ் மாற்று திறனாளி இளைஞர் , ஆர்லாண்டோவைச் சேர்ந்த22 வயது நிமா பாசெலி,மற்றும் 17 வயது கிரஹாம் கிளார்க் ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு இணையதளத்தில் பல மோசடிகளை செய்து இந்த டீனேஜ் வயதிலேயே பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளனர் .மேலும் அவர்கள் இணைய தள மோசடிகள் மற்றும் ஆன்லைன் அக்கௌண்டுகளிருந்து பணம் திருடுதல் போன்ற குற்றங்களை மட்டும் செய்யவில்லை ,பல முக்கிய பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்ததால் வசமாக அமெரிக்க போலீசில் சிக்கியுள்ளனர் .அவர்கள் ஹேக் செய்த ட்விட்டர் கணக்குகளில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ,அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் டெஸ்லா நிறுவன அதிபர் மஸ்க் ஆகியோர் ட்விட்டர் கணக்குகள் குறிப்பிடத்தக்கவை .இந்த டீனேஜ் குற்றவாளிகளை அமெரிக்க போலீஸ் கண்டறிந்துள்ளதை ட்விட்டர் நிறுவனம் “இது மிகப்பெரிய சாதனை என்றும் ,இதனால் மிகப்பெரிய மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளது” என்றும் பாராட்டியுள்ளது .“பில்கேட்ஸுக்கே பயம் காட்டி…ஒபாமாவையே ஓரம் கட்டி… “-கம்ப்யூட்டர் கம்பெனிக்காரங்க கணக்கையே ‘ஹேக்’ செய்த டீனேஜ்  கில்லாடிகள்..