கோவையில் உதவி பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது… 30 சவரன் நகைகள் மீட்பு

 

கோவையில் உதவி பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது… 30 சவரன் நகைகள் மீட்பு

கோவை

கோவையில் உதவி பேராசிரியர் வீட்டில் நகைகளை திருடிய 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வருபவர் ஆனந்தம். இவர் கோவை வேளாண் பல்கலை.யில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று ஆனந்தம், குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். 2 நாட்களுக்கு பின் வீட்டிற்கு வந்தபோது சமையலறை ஜன்னல் கம்பியை உடைத்து மர்மநபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்றது தெரியவந்தது.

கோவையில் உதவி பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மூவர் கைது… 30 சவரன் நகைகள் மீட்பு

இது குறித்து ஆனந்தம் அளித்த புகாரின் பேரில, வடவள்ளி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று சிறுவாணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் தென்னமநல்லூரைச் சேர்ந்த குட்டி என்ற அஜித்குமார் (25), ஆனந்த் (27) மற்றும் ஜார்கண்டை சேர்ந்த ராஜிவ் ( 23 ) என்பதும், அவர்கள் வடவள்ளியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, மூவரையும் கைதுசெய்த தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 30 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.