‘அடப்பாவி பேய விரட்டுறேன்னு அவுங்களையே பேயாக்கிட்டியே’ – அடித்து ,உதைத்து தாய், மகன் உயிரை பறித்த மந்திரவாதி ..

பேய் விரட்டுவதாக கூறி இருவரை மரத்தில் கட்டிவைத்து ,அவர்களின் உயிரை பறித்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர் .

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கல்யாண் டவுன்ஷிப்பில் உள்ள அடடே கிராமத்தில் ஒரு 76 வயது தாய்க்கும் அவரின் 50 வயது மகனுக்கும் குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டம் நிலவி வந்துள்ளது .பணக்கஷ்டம் முதல் மன கஷ்டம் வரை தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது .இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர்கள் அந்த ஊரிலுள்ள ஒரு மந்திரவாதியிடம் சென்றுள்ளனர் .அவர்களோடு அவர்களின் 17 வயது மகன் மற்றும் சில உறவினர்களும் சென்றுள்ளனர் .
அப்போது அந்த மந்திரவாதி அந்த தாயையும் ,மகனையும் ஒரு மரத்தில் கட்டி வைத்து அவர்கள் உடம்பில் பேய் பிடித்துள்ளதாக கூறி பெரிய கட்டையாலும் .கம்பாலும் அடித்துள்ளார் .அவர் கடுமையாக தாக்கியதில் அவர்களிருவரும் அங்கேயே உயிரிழந்துள்ளனர் .


அவர்கள் அங்கு உயிரிழந்த விஷயம் அந்த ஊர் மக்களிடையே காட்டு தீ போல பரவியது .அங்கிருந்த சிலர் இந்த தகவலை போலீசுக்கு கூறியுள்ளனர் .போலீசார் விஷயம் கேள்விப்பட்டு உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த மந்திரவாதியையும் ,மற்றும் இறந்தவர்களின் உறவினர்களையும் கைது செய்தனர் .அவர்களின் 17 வயது மகனையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து , பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Source: Vikatan

Most Popular

கமலா ஹாரீஸ் வேட்பாளர் அறிவித்ததும் வந்த தேர்தல் நிதி இத்தனை மில்லியன் டாலரா?

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

ஈரோடு அருகே மண்சரிவில் சிக்கி தொழிலாளி பரிதாப மரணம்!

தமிழகத்தில் கனமழையின் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் இன்று காலை முல்லை...

கொரோனாவில் இருந்து மீண்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இந்தியாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 4 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு...

‘115 நாட்கள் தொடர் பயணம்’.. மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த நபர்!

காஞ்சிபுரம் மாவட்டம் வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன்(47) என்பவர், முன்பையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் எனப்படும் தோல் நோய் இருக்கிறதாம். அதனால் இவர் மும்பையில் இருந்து...
Do NOT follow this link or you will be banned from the site!