‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ : விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

 

‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ :  விஜய் சேதுபதிக்கு   வலுக்கும் எதிர்ப்பு!

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 800 என்ற பெயரில் உருவாகும் இப்படம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை சொல்லும் படியாக உள்ளது. இருப்பினும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிங்கள அரசுக்கும், ராஜபக்சேவிற்கும் ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ :  விஜய் சேதுபதிக்கு   வலுக்கும் எதிர்ப்பு!

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு எழுதிய கடிதத்தில், “நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ :  விஜய் சேதுபதிக்கு   வலுக்கும் எதிர்ப்பு!

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது. 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும். ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய்!

‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ :  விஜய் சேதுபதிக்கு   வலுக்கும் எதிர்ப்பு!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மான்ஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன். எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர். உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கொலைக்கார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்’ :  விஜய் சேதுபதிக்கு   வலுக்கும் எதிர்ப்பு!

மேலும் அந்த அறிக்கையில், “அண்மையில் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு? அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா? இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.