ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரையாண்டு, காலாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை- வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரையாண்டு, காலாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை- வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரையாண்டு, காலாண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை- வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதாவது பெரும்பாலான தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை குறித்து வைத்துக் கொண்டு விடைத்தாள்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அதனை பெற்றோர் பாதுகாத்து வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகளில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. பல மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்திருப்பது புதிதாக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.