’ஆயிரம் ஏக்கர் வேதாரண்யம் கோயில் நிலத்தை மீட்க வேண்டும்’- இந்து முன்னணி பொதுக்குழுவில் தீர்மானம்!

 

’ஆயிரம் ஏக்கர் வேதாரண்யம் கோயில் நிலத்தை மீட்க வேண்டும்’- இந்து முன்னணி பொதுக்குழுவில் தீர்மானம்!

ஆயிரம் ஏக்கர் வேதாரண்யம் கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து கோயில் நிலங்கள் பல்வேறு தரப்பினரால் அபகரிக்கப்பட்டு இருப்பதாகவும் கோயில் நிலங்களுக்கு உரிய வாடகை மற்றும் குத்தகை பாக்கிகள் வசூல் செய்யவில்லை என்றும், தமிழகம் முழுவதும் 44 ஆயிரத்து 37 கோயில்களில் பல கோவில்களில் இன்றைக்கு ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை என்றும், வருமானம் உள்ள கோவில்களில் மேலும் வருமானத்தை பெருக்குவது குறித்து மட்டுமே அறநிலைத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாகவும் கோயிலுக்கு சொந்தமான ஐந்து லட்சம் ஏக்கர் நிலங்களில் நாலரை லட்சம் ஏக்கர் மட்டுமே கணக்கில் இருப்பதாகவும் மீதமுள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலம் யாரிடம் உள்ளது என்பதை அறநிலைத்துறை விளக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

’ஆயிரம் ஏக்கர் வேதாரண்யம் கோயில் நிலத்தை மீட்க வேண்டும்’- இந்து முன்னணி பொதுக்குழுவில் தீர்மானம்!

மேலும் நாலரை லட்சம் ஏக்கர் நிலத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டும். ஆனால் 65,000 கோடி ரூபாய் மட்டுமே வரும் வருமானம் இருப்பதாக அறநிலை துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசு அறநிலைத்துறை தலையிட்டு நிலத்திற்குரிய குத்தகைகளை முறையாக வசூல் செய்து பழமை வாய்ந்த கோயில்களை புதுப்பிப்பது ஓடு அனைத்து கோயில்களும் ஒரு கால பூஜை ஆவது நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதேபோன்று நாகை மாவட்டம் வேதாரணியம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை மத்திய அரசு குத்தகை எடுத்து உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு குத்தகைக்கு விடப்பட்ட நிலம் யாரிடம் விடப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித கணக்கு வழக்குகளும் அறநிலைத்துறை இடமில்லை . அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வேதாரணியம் கோயில் நிலத்தை மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.