தஞ்சையில் தொடர் மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தஞ்சையில் தொடர் மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் நனைந்து முளைக்கட்டியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பெய்த தொடர் மழையினால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதடைந்தன. பின்னர், மழை குறைந்ததால் விளை நிலங்களில் தேங்கியிருந்த மழைநீரை விவசாயிகள் வடிய செய்து, அறுவடைக்கு தயாராகி வந்தனர்.

தஞ்சையில் தொடர் மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

இதனால் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளதால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தும், முதலை எடுக்க முடியாத சூழலில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக அரசு அதிகாரிகள் சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கிட்டு, முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சையில் தொடர் மழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால், வாண்டையார் இருப்பு, காட்டூர், துறையுண்டார் கோட்டை, மூர்த்தி அம்பாள்புரம், சடையார்கோவில், கீழஉள்ளூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து ஈரப்பதத்தில் இருப்பதால் நெல்மணிகள் முளைத்து சேதமாகி உள்ளது.