பா.ஜ.க-வுக்கு தாவும் எம்.எல்.ஏ… பேச்சு வார்த்தை நடத்தும் எம்.பி… கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!

 

பா.ஜ.க-வுக்கு தாவும் எம்.எல்.ஏ… பேச்சு வார்த்தை நடத்தும் எம்.பி… கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.க-வில் இணை உள்ள செய்தி மு.க.ஸ்டாலின் மீது எம்.எல்.ஏ-க்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பலரும் பா.ஜ.க-வில் இணைய பேசி வருவது ஸ்டாலினை கலக்கம் அடையச் செய்துள்ளது.

பா.ஜ.க-வுக்கு தாவும் எம்.எல்.ஏ… பேச்சு வார்த்தை நடத்தும் எம்.பி… கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!
ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் இன்று பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக செய்தி வௌியானது. இதைத் தொடர்ந்து தி.மு.க தலைமை திடீர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இவை எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் சோர்வையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-வுக்கு தாவும் எம்.எல்.ஏ… பேச்சு வார்த்தை நடத்தும் எம்.பி… கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சரி, அவர் மறைவுக்குப் பிறகும் சரி ஒரு எம்.எல்.ஏ- கூட அ.தி.மு.க-வை விட்டு விலகவில்லை. உட்கட்சி பூசல் இருந்தாலும் அ.தி.மு.க என்ற நிலையில் எம்.எல்.ஏ-க்கள் ஒன்றாகவே இருந்தனர்.
ஆனால் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரே கட்சி மாறிவிட்டார். தற்போது எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.க-வுக்கு செல்கிறார். இது எல்லாம் கட்சித் தலைமை மீது நிர்வாகிகள், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கட்சியை வழிநடத்த ஸ்டாலினுக்குத் தெரியவில்லை. அதனால் இன்னும் அதிகம் பேர் கட்சியை விட்டு வெளியேற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. அதில் முக்கியமாக பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி வைத்துள்ள எம்.பி ஒருவரே பா.ஜ.க-வில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அதற்குள்ளாக கட்சியின் முன்னணி தலைவர்கள், 2ம் கட்ட தலைவர்கள் எல்லாம் அணி மாற தொடங்கிவிட்டனர். இது இன்னும் பெரிய அளவில் தொடரும் என்றும் கூறப்படும் நிலையில், திடீர் கூட்டம் நடத்தி தனக்கு உள்ள அச்சத்தை ஸ்டாலின் வெளிப்படுத்திவிட்டார். இது மிகப்பெரிய அளவில் தொண்டர்களையும் சோர்வடையச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஸ்டாலின் முதல்வர் ஆகும் வாய்ப்பை அவரது மகனே கெடுத்துவிடுவார் என்று சமூக ஊடகங்களில் தி.மு.க சார்பு ஊடகவியலாளர்களே கூறிவருவது குறிப்பிடத்தக்கது.