தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லை!

 

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லை!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் இல்லை என தகவல் கிடைத்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லை!

பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ” கொரோனா தடுப்பூசி போடுவது சவால் தான் இவற்றை சந்தித்தே அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். விருப்பத்திற்கு ஏற்றவாறு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் இலக்கை நோக்கிய திட்டம் இல்லை. திட்டமிட்டபடி ஒவ்வொரு மையத்திலும் ஒரே நாளில் 100 தடுப்பூசி போட வேண்டும் என்பது கட்டாயமில்லை. முன்பதிவு செய்தவர்களை அடிப்படையாகக் கொண்டே 166 மையங்கள் தேர்வு செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் இல்லை!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி காலை 10.30 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 மணி நேரத்திற்கு மேலாகியும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. காஞ்சிபுரத்தில் 2 பேருக்கும், மதுரையில் 150 பேருக்கும் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்களப் பணியாளர்கள் முன்வராததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தடுப்பூசி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுகாதாரத்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.