உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் – டிடிவி தினகரன்

 

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறி திமுகவிற்கு சென்றுவிட்ட நிலையில் தற்போதைய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சியில் தீவிர செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவுடன் இணைய இருக்கிறார் சசிகலா. அதனால்தான் தினகரன் கட்சியின் செயல்பாடுகள் இருந்து ஒதுங்கி இருக்கிறார். நிர்வாகிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது.

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் – டிடிவி தினகரன்

இந்நிலையில் திருச்சி அண்ணாமலை நகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை சந்தித்துவிட்டு வெளியே வந்தவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அதிமுக- அமமுக இணைய இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பியபோது, அதிமுக -அமமுக இணையுமா என்ற யூகங்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியாது. கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். சுயநலத்திற்காக வந்தவர் வந்தவர்கள் தான் விலை போய் இருக்கிறார்கள். அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சியும் சசிகலாவின் முயற்சியும் என்றவரிடம்,

உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் – டிடிவி தினகரன்

அதிமுகவின் இரட்டை தலைமையை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர், ஜெயலலிதா ,சசிகலா என்ற ஒற்றை தலைமை தான் இருந்தது. தற்போது அது இரட்டை தலைமையாக மாறியிருக்கிறது. பின்னர் மீண்டும் அது சரி செய்யப்படும் என்றவரிடம்,

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்த கேள்விக்கு, உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சரிதானே என்று தெரிவித்திருக்கிறார்.