முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

 

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

நாடு முழுவதும் ரணகளத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தனது வேலையை காட்டி வருகிறது. இங்கு இதுவரை கொரோனாவால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

நாடு முழுவதும் ஐந்தாவது கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். சுகாதார பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிந்தாலும் அதை அணிவதில் அசவுகரியங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் விதவிதமாக, வித்தியாசமான துணிகளில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் முகக்கவசம் மீதான நாட்டமும், சுகாதாரத்தின் மீதான அக்கறையும் மக்களுக்கு இன்னும் வரவில்லை.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவு!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டுவருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு சம்பவ இடத்திலேயே கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.