’அந்த 6 நாட்களும் ரொம்பவே கஷ்டம்’ வேதனையுடன் பகிரும் ஐபிஎல் வீரர்

 

’அந்த 6 நாட்களும் ரொம்பவே கஷ்டம்’ வேதனையுடன் பகிரும் ஐபிஎல் வீரர்

ஐபிஎல் 2020 போட்டியும் சிக்கல்களும் என பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் இந்த ஆண்டு நடக்கும் போலிருக்கிறது.  

ஜபிஎல் 2020 போட்டிகள் கொரொனாவால் ஒத்திவைக்கப்பட்டன. ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதியிலிருந்து போட்டிகள் தொடங்குகிறது. போட்டியில் ஆடும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

’அந்த 6 நாட்களும் ரொம்பவே கஷ்டம்’ வேதனையுடன் பகிரும் ஐபிஎல் வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். அதற்கு முன் கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டனர்.

அதன்பின் ஐக்கிய அமீரகம் புறப்பட்டனர். அங்கு வீரர்கள் மற்றவர்களைச் சந்திப்பது முதல் பயிற்சி எடுப்பது வரை பலவித கட்டுபாட்டுகள் விதிக்கப்பட்டன. காரணம் கொரோனா நோய்த் தொற்று வீரர்களுக்குப் பரவிவிடக்கூடாது என்பதற்காகவே.

’அந்த 6 நாட்களும் ரொம்பவே கஷ்டம்’ வேதனையுடன் பகிரும் ஐபிஎல் வீரர்

ஒவ்வோர் அணி வீரர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அப்படி, ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஐபிஎல் வீரர் தனது சிரமத்தை புலம்பி தள்ளியிருக்கிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீமின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகம்மது ஷமி. அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ‘நான்கு மாதங்கள் வீட்டிலேயே இருப்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் கஷ்டம்தான். நல்ல வேளையாக பயிற்சிகள் செய்யும் வசதி எனக்கு இருந்தது. அதற்கு கடவுளுக்கு நன்றி.

’அந்த 6 நாட்களும் ரொம்பவே கஷ்டம்’ வேதனையுடன் பகிரும் ஐபிஎல் வீரர்

ஐக்கிய அமீரகத்தில் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், கடந்த நான்கு மாதங்களில் பயிற்சி எடுத்ததோடு, உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவியும் செய்துவந்தேன். இப்படி என்னை பிஸியாக வைத்துக்கொண்டேன். ஆனால், இந்த ஆறு நாட்கள் தனிமைபப்டுத்தல் மூலம் இந்த நான்கு மாதங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்’ என்று கூறியிருக்கிறார் ஷமி.