“சீட் கிடைக்காததுக்கு அந்த 2 அமைச்சர்கள் தான் காரணம்” – பற்றவைத்த தோப்பு வெங்கடாசலம்!

 

“சீட் கிடைக்காததுக்கு அந்த 2 அமைச்சர்கள் தான் காரணம்” – பற்றவைத்த தோப்பு வெங்கடாசலம்!

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவின் நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் கடந்த வாரமே வெளியானது. நேற்று 171 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டனர். இதில் ஏராளமான மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கோகுல இந்திரா, கேபி முனுசாமி, ரமணா உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

“சீட் கிடைக்காததுக்கு அந்த 2 அமைச்சர்கள் தான் காரணம்” – பற்றவைத்த தோப்பு வெங்கடாசலம்!

அதேபோல தற்போது அமைச்சராக உள்ள 30 பேரில் பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி தவிர்த்து அனைவருக்கும் அவரவர் தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேபோல தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பெருந்துறை தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலத்தின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாகப் புதிதாக ஒருவரைக் களமிறக்கியிருக்கின்றனர்.

கட்சி தலைமை மீதும் இரண்டு அமைச்சர்கள் மீதும் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த தோப்புக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது. வெங்கடாசலத்தின் வளர்ச்சி பிடிக்காமல் ஈரோடு மண்டலத்தின் அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன் ஆகிய இருவரும் கட்சிக்குள் எதிராகச் செயல்பட்டுள்ளனர். தோப்பு வெங்கடாசலத்தை ஓரங்கட்டினர். இதனால் கோஷ்டி மோதலும் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தோப்பு அறிவித்தார். இச்சூழலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“சீட் கிடைக்காததுக்கு அந்த 2 அமைச்சர்கள் தான் காரணம்” – பற்றவைத்த தோப்பு வெங்கடாசலம்!

இன்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த அவர் தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில், அமைச்சர்கள் இருவரும் தன்னைப் பற்றி தவறான அறிக்கை கொடுத்ததன் காரணமாகவே சீட் மறுக்கப்பட்டுள்ளது என்று பகீரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். முன்னதாக ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடியிடம் நேராகச் சென்று அமைச்சர் பதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்ததும் கவனிக்கத்தக்கது. தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் தொண்டனை தடுப்பது தவறு. பெருந்துறை தொகுதியில் நான் எவ்வாறு செய்ல்பட்டு உள்ளேன் என தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். போட்டி, பொறாமை என்பது மனதளவில் இருக்க வேண்டும், ஆனால் ஒரு நல்ல தொண்டனை ஒரு மக்கள் பிரதிநிதியைத் தடுக்கக்கூடிய அளவில் அமைச்சர்கள் செயல்பட்டால் அது தவறுதான்.

“சீட் கிடைக்காததுக்கு அந்த 2 அமைச்சர்கள் தான் காரணம்” – பற்றவைத்த தோப்பு வெங்கடாசலம்!

என்னுடைய செயல்பாடுகள் சரியில்லை என்றால் அமைச்சர்கள் என் மீது குற்றம் சொல்லலாம். நான் தொகுதிக்கு கொண்டுவரக் கூடிய திட்டங்கள் கோவப்படுத்திருக்கிறது என்று சொல்லி என்மீது அவர்கள் பொறாமைப்பட்டால் அது இந்த இயக்கத்திற்கு பாதகமாக முடியும். ஜெயலலிதா இருந்தபோது நான் பல பொறுப்புகளைக் கவனித்தேன். ஆனால் தற்போது நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

2013ஆம் ஆண்டு செங்கோட்டையனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு தோப்புவிடம் கொடுக்கப்பட்டது. அப்போதிருந்தே செங்கோட்டையனை ஓரங்கட்டும் வேலையை தோப்பு பார்த்துவந்தார். இதையறிந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு அவரின் அமைச்சர் பதவியையும் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார். தற்போது செங்கோட்டையனும் கருப்பணனும் இணைந்து காய் நகர்த்தி தோப்புவை ஓரங்கட்டியிருக்கின்றனர்.