Home தமிழகம் அரிவாளுடன் ரவுடி உடலை அடக்கம் செய்தது ஏன்? தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை!

அரிவாளுடன் ரவுடி உடலை அடக்கம் செய்தது ஏன்? தூத்துக்குடி போலீசார் தீவிர விசாரணை!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி துரைமுத்துவை கைது செய்ய போலீசார் சென்ற போது, போலீசரிடம் இருந்து தப்பிக்க துரைமுத்து நாட்டு வெடிகுண்டு வீசினார். அந்த வெடிகுண்டு தலைமை காவலர் சுப்பிரமணியத்தின் தலையில் விழுந்து வெடித்ததால், காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, குண்டு வீசிய ரவுடியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், காவலர் சுப்பிரமணியத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குண்டுகள் முழங்க நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே ரவுடி துரைமுத்துவின் உடலை, அவர்களது உறவினர்கள் அரிவாளை வைத்து அடக்கம் செய்தனர். அரிவாளுடன் துரைமுத்து உடல் அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி எஸ்.பி, துரைமுத்து உடலை அரிவாளுடன் அடக்கம் செய்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் நாட்டு வெடிகுண்டு எங்கு தயாரிக்கப்பட்டது, பதுக்கி வைக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு- 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி திருச்சியில் கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த 2 காவலர்களை, ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். திருச்சி...

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி.. நிப்டி 197 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.31 லட்சம் கோடி நஷ்டம். இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில்...

சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி...

காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை – போலீஸ் விசாரணை

திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர், இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!