விசைப்படகு சிறைபிடிப்பை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் வேலைநிறுத்தம்!

 

விசைப்படகு சிறைபிடிப்பை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் வேலைநிறுத்தம்!

தூத்துக்குடி

இடிந்தகரை மீனவர்களால் படகு சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் இன்று வேலைறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது, இடிந்தகரை பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடைய விசைப்படகையும் சிறைபிடித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மீனவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வருகின்றனர். இந்த நிலையில் படகை விடுவிக்கக் கோரி, இருதரப்பு மீனவ சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

விசைப்படகு சிறைபிடிப்பை கண்டித்து, தூத்துக்குடி துறைமுக மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இந்த நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், அவர்களுடைய படகை விடுவிக்கக் கோரியும், தூத்துக்குடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் காரணமாக 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அதுவரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர்.