சாத்தான்குளம் வழக்கு: சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை ஒப்படைத்த சி.பி.சி.ஐ.டி!

 

சாத்தான்குளம் வழக்கு: சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை ஒப்படைத்த சி.பி.சி.ஐ.டி!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சாத்தான்குளம் வழக்கு: சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை ஒப்படைத்த சி.பி.சி.ஐ.டி!சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளம் போலீசார் அடித்து கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ போலீசார் விசாரிக்க வந்துள்ளனர். நேற்று தனி விமானம் மூலம் வந்த அவர்கள் நெல்லை விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். அங்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் நேரில் சந்தித்தனர். அப்போது, மூடி சீல் வைக்கப்பட்ட ஆவணங்கள் அடங்கிய கவரை சி.பி.ஐ அதிகாரிகளிடம் தமிழக போலீசார் வழங்கினர். இதன் மூலம் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் பங்கு முடிந்தது.

சாத்தான்குளம் வழக்கு: சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை ஒப்படைத்த சி.பி.சி.ஐ.டி!இனி வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திலிருந்து வழக்கு விசாரணையைத் தொடங்க சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு குழுவாக பிரிந்து வழக்கை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றசம் சாட்டப்பட்டர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணியை சி.பி.ஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.