தேர்தல் பொது பார்வையாளர்களுடன், தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை!

 

தேர்தல் பொது பார்வையாளர்களுடன், தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சமூகமாக நடத்துவது தொடர்பாக தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஆலோசனை நடத்தினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பார்வையாளர் ஆகியோர், தங்களது நடடிக்கைகள் குறித்து இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தேர்தல் பொது பார்வையாளர்களுடன், தூத்துக்குடி ஆட்சியர் ஆலோசனை!

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ், வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள், விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட வெகுமதிகளை வழங்கக்கூடாது என்றும் கூறினார்.

மேலும், தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை, குறிப்பிட்ட தேர்தல் பார்வையாளர்களிடம் வழங்கலாம் என்று கூறிய ஆட்சியர், அவர்களது செல்போன் எண்களையும் வழங்கினார். மேலும், வேட்பாளர்கள் வாரம்தோறும் தேர்தல் செலவு கணக்குகளை, கணக்கு அலுவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி ஆட்சியர், தபால் ஓட்டுகளின் விபரம் வேட்பாளருக்கும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.