#Thondamuthur தொண்டாமுத்தூரில் தொடரும் வெற்றிநடை.. அமைச்சர் வேலுமணிக்கு பெருகும் ஆதரவு!

#Thondamuthur தொண்டாமுத்தூரில் தொடரும் வெற்றிநடை.. அமைச்சர் வேலுமணிக்கு பெருகும் ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கே சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதிகள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகள் தவிர பிற இடங்களில் திமுக தான் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. இப்படி இருக்கும் சூழலில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? மக்களின் ஆதரவு யாருக்கு? உள்ளிட்ட பல கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி தொண்டாமுத்தூர்.

#Thondamuthur தொண்டாமுத்தூரில் தொடரும் வெற்றிநடை.. அமைச்சர் வேலுமணிக்கு பெருகும் ஆதரவு!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

அமைச்சர் எஸ்.பிவேலுமணியின் சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் கடந்த 30 ஆண்டுகளில் இடைத்தேர்தலுடன் சேர்த்து அதிமுக 3 முறையும் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், மதிமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மக்கள் மத்தியில் பேராதரவு இருப்பதால் இந்த முறையும் அதிமுகவில் இருந்து வேலுமணியே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவில் இருந்து கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார்.

#Thondamuthur தொண்டாமுத்தூரில் தொடரும் வெற்றிநடை.. அமைச்சர் வேலுமணிக்கு பெருகும் ஆதரவு!

ஆளப்போவது யார்?

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கான ஆதரவும் செல்வாக்கும் சற்றும் குறையவில்லை. இருந்தாலும் அதிமுக – பாஜக கூட்டணியால் மக்கள் அதிமுக அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த தொகுதி மக்களின் முக்கிய பிரச்னை என்னவென்றால் சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னை தான். ஒரு சிலர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

#Thondamuthur தொண்டாமுத்தூரில் தொடரும் வெற்றிநடை.. அமைச்சர் வேலுமணிக்கு பெருகும் ஆதரவு!

சர்வேயின் முடிவில், தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத் தான் மீண்டும் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதிமுகவுக்கு அடுத்த படியாக திமுகவுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா? அமைச்சர் வேலுமணி தனது கோட்டையை தக்க வைக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!