“அன்புமணி நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்” திருமாவளவன் அதிரடி!!

 

“அன்புமணி  நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்” திருமாவளவன் அதிரடி!!

அன்புமணியின் நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிதியுதவியும் அளித்தார். இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ,துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டன குரலை பதிவு செய்தனர்.

“அன்புமணி  நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்” திருமாவளவன் அதிரடி!!

இந்த சூழலில் அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அரக்கோணம் கொலைக்கு பின்னணியில் சாதி இல்லை என்றும் திருமாவளவன் தான் இதை சாதி பிரச்சினையாக மாற்றுகிறார் என்றும் தெரிவித்தார். அத்துடன் படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவனுடன் நிற்பதில்லை என்றும் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக ஆகிய நிலையில் சமூக வலைத்தளங்களில் #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டாக்குகள் வைரலானது.அத்துடன் திமுக எம்பி ,காங்கிரஸ் எம்பி உள்ளிட்டவர்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

“அன்புமணி  நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்” திருமாவளவன் அதிரடி!!

இந்நிலையில் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்’ என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் #நெஞ்சம்நிறைந்தநன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் காணொளி மூலமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” அன்புமணி தனிப்பட்ட என்னை விமர்சிப்பதாக நினைத்து படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் இளைஞர்களை கொச்சைப்படுத்தி உள்ளார். படித்தவர்கள் மேலானவர்கள் என்பது போன்ற அவரின் உளவியல் கருத்தை தெரிவித்துள்ளார் .படித்தவர்கள் ஆதரித்தால் தான் அவர்கள் உயர்ந்தவர்கள், படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை அவரது பேச்சில் தெரிகிறது. படித்தவர்கள் என்பது அதற்கான வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று பொருள். படிக்காதவர்கள் என்பது அதற்கான வாய்ப்பை பெறாதவர்கள் என்று பொருள். இது வெறும் பாகுபாடு உளவியல் தான். ஆனாலும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கின்ற சிறுமைப்படுத்தல் இதில் அடங்கியுள்ளது. நான் படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் தான் அதிகம் கருத்து கேட்பேன். நான் எழுதுகிற கவிதை, நான் பேசுகிற முழக்கம் உங்களுக்கு புரிகிறதா என்று கேட்பேன். அவர்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதை நான் என் துண்டறிக்கையில் சுவரொட்டியில் அடிச்சிடுவேன். படிக்காதவர்கள் அலட்சியப்படுத்துவது கொச்சைப் படுத்துவது என்பது மிக மோசமான ஆதிக்க உணர்வு கொண்ட மனநிலை . அது தலைகனம் .

“அன்புமணி  நிலையை எண்ணி பரிதாபப்படுகிறேன்” திருமாவளவன் அதிரடி!!

என்னதான் டாக்டர், என்ஜினியர் படித்திருந்தாலும், சாதிவெறி, மதவெறி ,சாதிவெறி சுயநலம், தன் குடும்பம் பிழைத்தால் போதும் என்ற மனநிலை ,யார் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்ற எண்ணம் ,அப்பாவி மக்களை மோதலுக்கு தூண்டிவிடுவது போன்ற எண்ணம்தான் இழிவான எண்ணம்.எனவே என்னை கொச்சைப்படுத்துவதாக எண்ணி கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும், சமூகத்தையும் இழிவுபடுத்துகின்ற உளவியலை அன்புமணி ராமதாஸ் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன். திருமாவளவன் சமூக நீதி களத்தில் போராடுகிற ஒரு சக தோழன். எனவே நாங்கள் அவர் பக்கம் இருக்கிறோம் .சாதி மதங்களை எல்லாம் கடந்து நிற்கிறோம் என்று எனக்காக குரல் கொடுத்து அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.