பாஜகவினர் இரட்டை வேடமல்ல, பல வேடம் போடக்கூடியவர்கள்‌ – திருமாவளவன்

 

பாஜகவினர் இரட்டை வேடமல்ல, பல வேடம் போடக்கூடியவர்கள்‌ – திருமாவளவன்

தமிழகத்தைச் சார்ந்த சில ஓபிசி சமூகங்களின் பெயர்கள் இந்திய ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அச்சமூகங்களின் மாணவர்கள் இந்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பயன்களைப்பெற இயலவில்லை. எனவே, அச்சமூகங்களை பட்டியலில் இணைக்க ஆவன செய்யுமாறு அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

Image

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழகத்தை சார்ந்த மரவு சார்ந்த சாதி மத்திய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை. கட்டட நாயுடு, கற்பூர செட்டியார், வடநாட்டு வேள்ளாலர், சுந்தரம் செட்டி உள்ளிட்ட சாதிகள் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால் மத்திய அரசு பட்டியலில் இடம் பெறவில்லை. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றப்பட்டது மோடி அரசின் அநாகரிகமான அணுகுமுறை.

பாஜகவினர் இரட்டை வேடம் போடக்கூடியவர்கள் அல்ல பல வேடம் போடக்கூடியவர்கள்‌. பலர் பல கருத்துக்களை கூறுவார்கள். வாக்கு வங்கிக்காக துணிந்து எதையும் செய்வார்கள். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் தலித்துகள் இடம் பெற்றிருந்தாலேயே அணி தோல்வியடைந்தது எனக்கூறுவது சாதிய வக்கிரத்தை காட்டுகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் அதை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.