புரட்டிப்போட்ட ஊரடங்கு: யாசகம் பெற்று வயிற்றை கழுவும் நாதஸ்வர கலைஞர்!

 

புரட்டிப்போட்ட ஊரடங்கு: யாசகம் பெற்று வயிற்றை கழுவும் நாதஸ்வர கலைஞர்!

திண்டுக்கல் அருகே வறுமையில் வாடும் நாதஸ்வரக் கலைஞர் குடும்பத்தை காப்பாற்ற கடை கடையாக சென்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வடமதுரை அருகே உள்ளது கெச்சானிபட்டி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது குடும்பம் நான்கு தலை முறையாக கோயில் திருவிழாக்கள், திருமணங்கள், காதுகுத்து போன்ற விஷேசங்களுக்கு சென்று மெல்லிசை கலைஞர்களுடன் நாதஸ்வரம் வாசிப்பது வழக்கம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மூன்று பெண் குழந்தைகள், மனநிலை பாதித்த ஒரு மகன் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட 7 பேருடன் வாழ்ந்துவருகிறார்.

Security Check Required

null

ஊரடங்கு காரணமாக கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து போன்ற எந்த விஷேசங்களும் நடைபெறாததால் சரவணனின் குடும்பம் மிகவும் வறுமை சூழ்நிலைக்கு தள்ள பட்டுள்ளது. பசி பட்டினி சூழ்நிலைக்கு மாறியதால் தன்னை நம்பி வாழும் குடும்பத்தை சேர்ந்தவர்களை காப்பாற்றிட வேறுவழி இன்றி கடைக்கடையாக ஏறி இறங்கி நாதஸ்வரம் வாசித்து பசி ஆற்றிட காசு பணம் வாங்காமல் அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை மட்டும் வாங்கி வந்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தமிழக அரசோ, அரசியல்வாதிகளோ மெல்லிசை கலைஞர்களுக்கு எந்த விதமான உதவிகளை வழங்க வில்லை எனக்கூறும் சரவணன், இரண்டு மாதமாக எந்த தொழிலுக்கும் செல்ல முடியாததால் அடுத்த ஆண்டே எங்களின் தொழில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் சரவணன் வருத்தத்துடன் கூறுகிறார்.