’இந்த வீரர் இப்போது ஆஸ்திரேலியா செல்வது அவசியம்’ வெங்சர்க்கார்

 

’இந்த வீரர் இப்போது ஆஸ்திரேலியா செல்வது அவசியம்’ வெங்சர்க்கார்

ஆஸ்திரேலியாவில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றாலு, டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாகத் தோற்றது இந்திய அணி. இந்தத் தோல்வியைத் தொடங்கி வைத்த பெருமை ப்ரீத்திவ் ஷாவையே சேரும். ஆமாம். அவர்தான் முதல் இன்னிங்கிஸில் 2 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்டானார். அதுதான் இந்தத் தொடரின் முதல் ஓவர்.

’இந்த வீரர் இப்போது ஆஸ்திரேலியா செல்வது அவசியம்’ வெங்சர்க்கார்

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியோடு கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்புகிறார். இதனால் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் ஒரு யோசனையை முன் வைத்துள்ளார்.

இந்திய தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக உள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பசொல்கிறார் வெங்சர்க்கார். ‘ராகுல் டிராவிட் ஆஸ்திரேலியா சென்றால், வலை பயிற்சியின்போது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல உத்திகளைக் கற்றுக்கொடுக்க முடியும். குறிப்பாக பந்துகளை எவ்வாறு கணித்து ஆட முடியும் என்று ஆலோசனை கொடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

’இந்த வீரர் இப்போது ஆஸ்திரேலியா செல்வது அவசியம்’ வெங்சர்க்கார்

ஆனால், ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியையே வேண்டாம் எனச் சொன்னவர். இப்போது செல்வாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால், பிசிசிஐ வட்டாரத்தில் யாரையும் ஆஸ்திரேலியா அனுப்பும் திட்டம் இல்லை என்றே கூறப்பட்டிருக்கிறது.