“இந்த அமைச்சர் ஒரு அப்பிராணி” – விமர்சிக்க விரும்பாத ஸ்டாலின்

 

“இந்த அமைச்சர் ஒரு அப்பிராணி” – விமர்சிக்க விரும்பாத ஸ்டாலின்

ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சிறுவலூரில் திமுக சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்தகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

“இந்த அமைச்சர் ஒரு அப்பிராணி” – விமர்சிக்க விரும்பாத ஸ்டாலின்

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தடுத்து நிறுத்த அதிமுக சதி செய்கிறது என்றும், கோவை கூட்டத்தின்போது, அமைச்சர் வேலுமணி தூண்டுதலின் பேரில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ஊடுருவி, குழப்பம் ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கோபி தொகுதியில் எட்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள செங்கோட்டையன், மூத்த அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் என்ன மாற்றம் நடக்கிறது, என்ன அறிவிப்பு வருகிறது என்பதே அவருக்குத் தெரியாது என்றும் கூறினார்.

“இந்த அமைச்சர் ஒரு அப்பிராணி” – விமர்சிக்க விரும்பாத ஸ்டாலின்

மேலும், செங்கோட்டையன் முன்பாக முதல்வர் பழனிசாமி கைகட்டி நின்ற காலம் இருந்ததாகவும், தற்போது பழனிசாமி முன்பாக செங்கொட்டையன் கைகட்டி நிற்கிறார் என்றும் கூறிய ஸ்டாலின், செங்கோட்டையன் ஒரு அப்பிராணி என்றும், அவரை பற்றி விமர்சனம் செய்ய தான் தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.