அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

இன்னும் சரியாக ஏழே நாட்கள்தான் இருக்கின்றன அமெரிக்காவின் அதிபர் தேர்தலுக்கு. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

அதிபர் ட்ரம்ப்க்கு பெரும் தலைவலியாக இருப்பது, கொரோனா பரவல்தான். சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நாளிலிருந்து அமெரிக்காவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 88,89,179 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 230,510 பேரை கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே எப்படியாவது கொரோனா தடுப்பூசியைக் கொண்டுவந்துவிடலாம் என நினைத்த ட்ரம்ப் கனவு நிறைவேற வில்லை. மாறாக அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓட்டு போட்டதும் சொன்னது இதுதான்!

அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களிக்கும் வசதி உள்ளது. அதனால், புளோரிடா மாகாணத்தில் உள்ள நூலகத்தில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஓட்டு போட்டார்.

அப்போது ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘ட்ரம்ப் எனும் ஒரு பையனுக்கு ஓட்டு போட்டிருக்கிறேன்’ என்று சொன்னார்.