மதிய உணவு திட்டத்தில் துணை ஜனாதிபதி அவசியம் சேர்க்கச் சொல்வது இதுதான்!

மதிய உணவு திட்டத்தில் துணை ஜனாதிபதி அவசியம் சேர்க்கச் சொல்வது இதுதான்!

இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டமாக தமிழ்நாடு கொடுத்தது மதிய உணவுத் திட்டம்தான். காமராஜர் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டம், அடுத்தடுத்த ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் பலனைக் கண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

மதிய உணவு திட்டத்தில் துணை ஜனாதிபதி அவசியம் சேர்க்கச் சொல்வது இதுதான்!

தமிழ்நாட்டில் மதிய உணவில் முட்டை, வாழைப்பழம் உள்ளிட்டவை சேர்க்கப்படுகிறது. தற்போது லாக்டெளனால் பள்ளிக்கு மாணவர்கள் வர முடியாவிட்டாலும் வீட்டுக்கு முட்டை கொடுப்பது தொடர்கிறது.

இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில் முக்கியமான ஒன்றைச் சேர்க்கச் சொல்லி இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வழிகாட்டியுள்ளார்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்காக காலை உணவிலோ அல்லது மதிய உணவிலோ பாலை சேர்க்கலாம் என்று குடியரசு துணைத் தலைவர்  எம் வெங்கையா நாயுடு இன்று யோசனை தெரிவித்தார்.

மதிய உணவு திட்டத்தில் துணை ஜனாதிபதி அவசியம் சேர்க்கச் சொல்வது இதுதான்!

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்  ஸ்மிதி இரானியுடன் பேசும் போது இந்த யோசனையை வெங்கையா நாயுடு  தெரிவித்தார். மதிய உணவுத் திட்டத்தில் பாலை சேர்க்க அனைத்து  மாநிலங்களுக்கும் பரிந்துரைக்க மத்திய அரசு பரிசீலிக்கும் என்று குடியரசு துணைத் தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.

மதிய உணவு திட்டத்தில் துணை ஜனாதிபதி அவசியம் சேர்க்கச் சொல்வது இதுதான்!

முன்னதாக, கால்நடை மற்றும் பால்வளத் துறை செயலாளர்  அனில் சதுர்வேதி குடியரசு துணைத் தலைவரை குடியரசு துணைத் தலைவர்  மாளிகையில் சந்தித்து, கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள, பண்ணைகள் மற்றும் பால்வளத் தொழில்களுக்கு உதவ  எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைத்தார்.