ரஜினியிடம் பாராட்டு பெற்ற youtube பிரபலம் இவர்தான்!

 

ரஜினியிடம் பாராட்டு பெற்ற youtube பிரபலம் இவர்தான்!

சோஷியல் மீடியாவில் தன் பாடல்களால் கலக்கி வருபவர் சிறுமி ப்ரணதி. தன் இனிமையான குரலால் லட்சக்கணக்கில் ரசிகர்களை வசிகரித்து வருபவர்.

ப்ரணதி சென்னையில் பிறந்தவர். ஆனால், தற்போது இருப்பது அமெரிக்காவில். காரணம் ப்ரணதியின் அப்பா அமெரிக்காவில் வேலை என்பதால் அங்கேயே சென்று விட்டார். ஆனால், பாடல் பாடுவதைத் தவிர்க்க முடியவில்லை ப்ரணதியால்.

ரஜினியிடம் பாராட்டு பெற்ற youtube பிரபலம் இவர்தான்!

ப்ரணதியின் ஆர்வத்தைப் பார்த்த அவரின் அப்பா, ஒரு யூடியூப் சேனல் தொடங்கி கொடுத்தார். அதன் வழியே பாடல்களைப் பாடி வீடியோக்களை அப்லோட் செய்யவும் உதவினார் அப்பா. யூடியூபில் ப்ரணதியின் வீடியோவுக்கு செம ரெஸ்பான்ஸ்.

ரஜினியிடம் பாராட்டு பெற்ற youtube பிரபலம் இவர்தான்!

ப்ரணதி பாடல்களை அப்படியே பாடாமல், அந்த பாடலுக்கு உரிய கெட்டப்போடு பாடுவார். அது பலரையும் ஈர்த்தது. அப்படித்தான் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காதலின் தீபம் ஒன்றை ஏற்றினாளே என் நெஞ்சில்..’ என்ற பாடலை ரஜினியின் உடையோடு அதேபோல அணிந்து பாடி நடித்திருந்தார். அது ஏகப்பட்ட புதிய ரசிகர்களை அவருக்கு அள்ளித்தந்தது. ட்விட்டர், ஃபேஸ்பு, வாட்ஸப் என அனைத்திலும் பரவலாக அந்த வீடியோ பகிரப்பட்டது.

ரஜினியிடம் பாராட்டு பெற்ற youtube பிரபலம் இவர்தான்!

அதைப் பார்த்து ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியிருப்பதாக ப்ரணதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். ’அருவி’ படத்தில் ப்ரணதி நடித்தும் உள்ளார்.   நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும்பட்சத்தில் தொடர்ந்து நடிக்கவும் ஆர்வமாக உள்ளார்.

சிவகார்த்திகேயன், அமலா பால், ஷ்ரேயா கோஷல் என பலரின் பாராட்டுகள் ப்ரணதிக்கு குவிந்து வருகின்றன. விரைவில் பாடகியாக மட்டுமல்ல, நடிகராகவும் முத்திரை பதிப்பார் என்றே தெரிகிறது.