ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்களை யூடியூப் நீக்கிய காரணம் இதுதான்

 

ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்களை யூடியூப் நீக்கிய காரணம் இதுதான்

இது காட்சிகளின் காலம். ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் யுடியூப் சேனல் ஆரம்பித்து விடலாம். இப்படி உலகம் முழுவதும் பல மில்லியன் கணக்கில் யூடியூப் சேனல்கள் இருக்கின்றன.

செய்திகளை அப்படியே சொல்லும் சேனல்களும் இருக்கின்றன. அதேநேரம் அதிக வியூஸ்களுக்காக செய்தியைத் திரித்துச் சொல்லும் சேனல்கள் ஏராளம் இருக்கின்றன.

ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்களை யூடியூப் நீக்கிய காரணம் இதுதான்

செய்தியைத் திரிப்பது, வன்முறையைத் தூண்டும் விதத்தில் வீடியோக்கள் வெளியிடுவது என பல வகைகளில் பார்வையாளர்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், இது சட்டரீதியாக தவறான செயல்.

யூடியூப் நிறுவனம் தனக்கு என சில விதிகளை வரையறுத்துள்ளது. அதன்படி, விதிகளை மீறும் வீடியோக்களை அது நிரந்தரமாக நீக்கி விடும். அதன்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டு மாதங்களில் யூடியூப்பில் 50 லட்சம் வீடியோக்களை நீக்கியது அந்த நிறுவனம்.

ஒரு கோடிக்கும் அதிகமான வீடியோக்களை யூடியூப் நீக்கிய காரணம் இதுதான்

காரணம் நாம் ஏற்கெனவே பார்த்தவைதான், வன்முறையைத் தூண்டுபவை, குழந்தைகளைத் தவறாகச் சித்திரிப்பவை, பாலியல் அத்துமீறல்கள், தவறான செய்திகளைக் கொடுப்பது, தனி மனிதர்களை மோசமாகச் சித்திரிப்பது, விலங்குகளை துன்புறுத்துவது போன்ற காரணங்களால் அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டன.

இப்போது இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் மேலும் 11.4 மில்லியன் வீடியோக்களை மேற்கூரிய காரணங்களால் நீக்கியுள்ளது யூடியூப் நிறுவனம்.

யூடியூப் நிறுவனம் அந்த வீடியோக்களை நீக்கினாலும் அவை வேறு பெயர்களில் வருவது வழக்கமாகி விட்டது. ஆயினும் அந்த வீடியோக்கள் பதிபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் பட்சத்தில் இவை குறையலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.