’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

 

’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஆடிய ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியது. நேற்று தொடங்கிய டி20 போட்டியில் எப்படியும் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்றே கேப்டன் கோலி திட்டமிட்டிருந்தார்.

நேற்றைய போட்டியின் மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால், முதலில் பேட்டிங் என்பதே சரியான முடிவாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய கேப்டன் டாஸ் வென்றும் இந்திய அணியை பேட்டிங் ஆட வைத்தது ஆச்சர்யம்.

’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

ஆனபோதும், கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா இருவரைத் தவிர மற்றவர்கள் சோபிக்காததால் இந்திய அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை எளிதாக ஆஸ்திரேலிய அணி எடுத்துவிடும் என நினைத்த நிலையில் சஹல் மற்றும் நடராஜனின் பந்து வீச்சில் சுருண்டு தோல்வியைத் தழுவியது இந்திய அணி.

உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவர் பும்ரா. ஐபிஎல் போட்டியில் மும்பை வெல்ல முக்கியக் காரணம் பும்ராதான். இந்நிலையில் அவரை நேற்று ஆடும் லெவன் அணியில் சேர்க்காமல் நடராஜனைச் சேர்த்திருந்தார் கோலி. இது பலருக்கும் ஆச்சர்யம். பும்ராவை உட்கார வைப்பது என்பது பலரும் எதிர்பாராத முடிவு. அந்தளவு நடராஜன் மீது நம்பிக்கை வர என்ன காரணம்.

’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

அதற்கு முன் நடந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மோசமாகத் தோற்றிருந்தது இந்திய அணி. அதற்கு முக்கிய காரணம் பவுலர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த தவறியதே… குறிப்பாக, பவர் பிளேவில் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் இரு போட்டிகளிலும் 300 ரன்களைக் கடந்தே அடித்திருந்தனர். இந்நிலையில் மூன்றாம் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் பெரிய பாதிப்பில்லை என்ற நிலையில் நடராஜனை இறக்கினார் கோலி.

மூன்றாம் போட்டியில் இறங்கிய நடராஜன், பவர் பிளேவில் விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் லபுசென்னை. இதுதான் கோலியைக் கவர்ந்துவிட்டது. அதனால்தான் டி20 முதல் போட்டியில் பும்ராவைத் தவிர்த்து நடராஜனைத் தேர்வு செய்ய காரணம். கோலியின் நம்பிக்கை வீண் போக வில்லை. நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.

’நடராஜன் இந்தியன் டீமின் சொத்து’ கேப்டன் கோலி புகழ இதுவே காரணம்!

கேப்டன் கோலி, நடராஜனைப் பற்றி சொல்லும்போது, ‘நடராஜன் இந்திய அணியின் சொத்து’ என்று புகழ்ந்திருக்கிறார். இந்தப் பாராட்டுக்குப் பின்னால் சின்ன கிராமத்திலிருந்து கடுமையாகப் போராடிச் சென்ற நடராஜனின் உழைப்பும் முயற்சியும் இருக்கிறது.